Tuesday, July 4, 2017

வறண்ட விழிகள்


நான் அந்த வறண்ட இருவிழிகளை என் வாழ்நாளில் முதன் முறையாகப் பார்க்கிறேன். அது ஒரு இரவு மணி 10.30 க்கு மேல் இருக்கும். என் கணவரின் தாயையும் தமக்கையையும் மைசூர் பேருந்து ஏற்றி விடுவதற்காக சென்று கொண்டிருந்தோம்.

எல்லோரும் முன்பு சென்று கொண்டிருந்தனர். நான் என் ஆறு வயது மகனை பிடித்துக் கொண்டே அவர்களுக்கு மிகுந்த தொலைவில் பின்பு சென்று கொண்டிருந்தேன்.

அது ரோட்டில் இருந்த பிள்ளையார் கோவிலின் பின்புறம். பின் இருபது வயதையொத்த இரு பெண்கள் உட்கார்ந்திருந்தனர். அதில் ஒரு பெண் நிமிர்ந்து என்னையும் என் மகனையும் பார்த்தார்பவுடர் பொட்டுடன் இருந்த அந்த முகத்தில் விழிகளும் விழிகளைச் சுற்றியும் வேறு விதமாக இருந்தது. ஏன் இந்த நேரத்தில் இங்கே உட்காந்திட்டு இருக்காங்க என்று நினைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்த படியே சென்றேன். இரண்டு நிமிடம் கழித்து மனதில் ஏதோ உரைத்தது. இதயம் படபட வென அடித்தது. ஆமாம். அப்பெண்கள் நம்மில் பலரால் விலை மாது என்று அழைக்கப் படுபவர்கள்.

எல்லோருக்கும் ஒரு பெயர் வைத்திருக்கிறொம். நமக்குத் தெரிந்ததெல்லாம் அது மட்டும் தான். அந்த விழிகள் இப்போதும் என் கண் முன்னே நிற்கின்றன. அழுது அழுது கண்ணின் ஈரம் வற்றி வறண்டு போன விழிகளாகத் தான் எனக்குத் தோன்றிக் கொண்டே இருக்கிறது.



ஆயிரம் விஷயங்களை ஒரு நொடியில் உணர்த்தின அவ்விரு வரண்ட விழிகள் ...

3 comments:

  1. விழி பேசும் மொழி கற்றவர் போல.

    ReplyDelete
    Replies
    1. என் தமிழ் மொழி தவிர வேறு எம்மொழியும் கற்க விழைந்தது இல்லை 🙂

      Delete